பாரததேவி பள்ளி: இலவச மாஸ்க் வழங்கல்
திருபுவனை , புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி சார்பில் 2500 பேருக்கு இலவச மாஸ்க் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டது.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் மதகடிப்பட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் இளமதியழகன் தலைமை தாங்கினார்.சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் துளசி பள்ளி சார்பில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு இலவச முக கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கினார்.
தொடர்ந்து மதகடிப்பட்டு உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளியின் பொறுப்பாசிரியர் தேவி, ஆசிரியர்கள் கலையரசி, திலகவதி, பிரியதர்சினி, பிரிதி, குறளரசி, ரம்யா, இஸ்மத்பானு, புவனா, ஸ்வினியா, ஷர்மிளா, வாசுகி, ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்துகொண்டனர்.