வேப்பூரில் தொலைந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலிசார்
வேப்பூர் பழக்கடையில் அரசு ஊழியர் விட்டு சென்ற பணத்தை உரியவரிடம் வேப்பூர் போலிசார் ஒப்படைத்தனர்
கடலூர் மாவட்டம் , வேப்பூர் அருகிலுள்ள அடரி அருகிலுள்ள கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் கலியபெருமாள் (வயது 50) , அரசு போக்குவரத்து கழக ஊழியரான இவர் நேற்று காலை தனது மகள் அம்மை வார்த்திருப்பதால் பழங்கல் வாங்க வந்தவர் பழக்கடைக்கு வந்தவர் பணம் வைத்திருந்த தனது கை பையை பழக்கடையிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்
இந்நிலையில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு உத்தரவை தொடர்ந்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ, சக்திகணேஷ் மற்றும் தலைமை காவலர் பத்மநாபன், புகழேந்தி, போலிசார் உமா, சரத் ஆகியோர் வேப்பூர் கூட்டுரோடு பகுதியில் ரோந்து சென்றனர்
அப்போது பழகடை வியாபாரி பிரகாஸ் என்பவர் தனது கடையில் பணத்துடன் இருந்த பையை இன்ஸ்பெக்டர் கவிதவிடம் ஒப்படைத்தார்
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா பணத்தின் உரிமையாளர் கலியபருமாளிடம் ஒப்படைத்தார், பழ வியாபாரிக்கு நன்றி செல்லி பணத்தை பெற்றுக்கொண்டார்.