தருமபுரி மாவட்ட எஸ்.பி ராஜன் எச்சரிக்கை
144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருப்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்.பி ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊர் எப்படி இருக்கிறது என சுற்றி பார்க்கவோ, வேடிக்கை பார்க்கவோ இருசக்கர வாகனத்தில் வந்தால் இருசக்கரவாகனம் பறிமுதல் செய்யப்பட்டு , இருசக்கர வாகனத்தில் வருபவர்களின் பெற்றோர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
நான்கு சக்கர வாகனத்தில் அனுமதி இல்லாமல் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் அனைவரும் கும்பலாக செல்வதை தவிர்க்க வேண்டும் . கடைகளில் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும் . மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
படும் அரசின் உத்தரவை பொதுமக்கள் முழுமையாக மதித்து செயல்பட வேண்டும் அப்படி மதிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ராஜன்கேட்டுக்கொண்டுள்ளார்.